/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஊராட்சிகளில் 1,012 புதிய குளங்கள்...ரூ.138 கோடி!:இயந்திரங்களை தவிர்க்க உத்தரவுஊராட்சிகளில் 1,012 புதிய குளங்கள்...ரூ.138 கோடி!:இயந்திரங்களை தவிர்க்க உத்தரவு
ஊராட்சிகளில் 1,012 புதிய குளங்கள்...ரூ.138 கோடி!:இயந்திரங்களை தவிர்க்க உத்தரவு
ஊராட்சிகளில் 1,012 புதிய குளங்கள்...ரூ.138 கோடி!:இயந்திரங்களை தவிர்க்க உத்தரவு
ஊராட்சிகளில் 1,012 புதிய குளங்கள்...ரூ.138 கோடி!:இயந்திரங்களை தவிர்க்க உத்தரவு
UPDATED : ஜூலை 19, 2024 06:46 AM
ADDED : ஜூலை 19, 2024 12:37 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, ஊராட்சி ஒன்றியங்களில், 138 கோடி ரூபாய் மதிப்பில், 1,012 புதிய குளங்கள் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணிகளை, இயந்திரங்களைத் தவிர்த்து, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மனித சக்தியை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியங்களில், 358 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், சாலை அமைத்தல், மழைநீர் கால்வாய், ஏரி, குளங்கள் துார் வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒதுக்கீடு
ஊரகப் பகுதிகளில் மழைநீரை சேகரித்து, வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், புதிய சிறு குளங்கள் அமைக்கவும், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 1,012 புதிய குளங்கள் அமைத்தல், குளங்களை துார் வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக, 137.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இப்பணிகளை செயல்படுத்த, மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, 2024 - 25ம் நிதியாண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சிகளில், புதிய குளங்கள் அமைக்கும் பணி மேற்கொள்வது குறித்து, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கண்காணிப்பு
இப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கியும், மனித சக்தியை பயன்படுத்தி பணிகளை செயல்படுத்த வேண்டும் எனவும், அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஏழு ஊராட்சி ஒன்றியங்களிலும், பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், பொன்மார் ஊரட்சியில், புதிய குளம் அமைக்கப்படும் பணியை, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனர்.
புதிய குளம் அமைக்கும் பணியில், இயந்திரங்கள் பயன்படுத்த தடை இருப்பதால், மனித சக்தி நாட்களை பயன்படுத்தி, பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணிகள் நடைபெறுவதை புகைப்படம் எடுத்து, தினசரி கண்காணித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அவற்றை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வையிட்டு, அதுகுறித்தான கருத்துருவை கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.