/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வேலை வாய்ப்பு முகாமில் 186 பேருக்கு பணி ஆணை வேலை வாய்ப்பு முகாமில் 186 பேருக்கு பணி ஆணை
வேலை வாய்ப்பு முகாமில் 186 பேருக்கு பணி ஆணை
வேலை வாய்ப்பு முகாமில் 186 பேருக்கு பணி ஆணை
வேலை வாய்ப்பு முகாமில் 186 பேருக்கு பணி ஆணை
ADDED : ஜூன் 22, 2024 12:51 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு சிறப்பு முகாமில், 186 பேருக்கு பணி நியமன ஆணைகளை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் செயல்படுகிறது. இங்கு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சிறிய அளவிலான வேலை வாய்ப்பு சிறப்பு முகாம், நேற்று நடந்தது.
இதில், 369 ஆண்கள், பெண்கள் 427 பேர் என, 796 பேர் பங்கேற்றனர். இதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் 14 பேர் பங்கேற்றனர்.
இந்த முகாமில், 186 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, பணி நியமன ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.
திறன் பயிற்சிக்காக, 13 நபர்கள் பதிவு செய்தனர். முதற்கட்ட தேர்வில், 204 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகைவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.