/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
ADDED : ஜூன் 22, 2024 12:52 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், சர்வதேச யோகா தின நிகழ்ச்சி, கல்லுாரி முதல்வர் அருணாதேவி தலைமையில், நேற்று நடந்தது.
இதில், செங்கல்பட்டு ஈஷா யோகா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பங்கேற்று, யோகாவின் முக்கியத்துவம் குறித்து மாணவியரிடம் விளக்கினர். இதில், 1,100 மாணவியர் பங்கேற்று, பல்வேறு யோகாசன பயிற்சிகள் செய்தனர்.
திருமுக்காடு
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமுக்காடு ஊராட்சியில், திருமுக்காடு ஊராட்சி தலைவர் பெருமாள் தலைமையில், யோகா ஆசிரியர்கள் பங்கேற்று, கிராம பொது மக்களுக்கு யோகா பயிற்சி வழங்கினர்.
இதில், ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
மாமல்லபுரம்
தொல்லியல் துறையின் சென்னை வட்ட நிர்வாகத்தினர், மாமல்லபுரம் அபிராமி யோகாலயம் தன்னார்வலர்களுடன் இணைந்து, கடற்கரை கோவில் பகுதியில், யோகா நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் பங்கேற்ற தொல்லியல் துறை நிர்வாகிகள், பள்ளி மாணவ - மாணவியருக்கு யோகா கலையின் இன்றியமையாமை குறித்து விளக்கினர்.
யோகா ஆர்வலர்கள் சுரேஷ்பாபு மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மோகன் ஆகியோர், மாணவ-ர்களுக்கு யோகாசனம் பயிற்றுவித்தனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, முதல் முறையாக மாமல்லபுரம் சிற்பங்களை காண, பயணியர் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.