/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வில்லியம்பாக்கம் டாஸ்மாக்கை வேறிடம் மாற்ற வேண்டுகோள் வில்லியம்பாக்கம் டாஸ்மாக்கை வேறிடம் மாற்ற வேண்டுகோள்
வில்லியம்பாக்கம் டாஸ்மாக்கை வேறிடம் மாற்ற வேண்டுகோள்
வில்லியம்பாக்கம் டாஸ்மாக்கை வேறிடம் மாற்ற வேண்டுகோள்
வில்லியம்பாக்கம் டாஸ்மாக்கை வேறிடம் மாற்ற வேண்டுகோள்
ADDED : ஜூன் 18, 2024 05:16 AM
வில்லியம்பாக்கம் : செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் -- சாஸ்திரம்பாக்கம் சாலையில், வில்லியம்பாக்கம் பகுதியில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இவ்வழியாக, வெண்பாக்கம், கொளத்துார், சாஸ்திரம்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பணிக்காக ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
ஆனால், இப்பகுதியில் மாலை நேரங்களில் மது பிரியர்கள் அதிக அளவில் குவிந்து, சாலையோரங்களிலேயே மது அருந்துகின்றனர்.
அது மட்டுமின்றி, போதை தலைக்கு ஏறியதும், இருசக்கர வாகனம், சாலையில் நடந்து செல்லும் பெண்களை, கிண்டல் செய்துவம்புக்கு இழுக்கின்றனர். இதனால், அடிக்கடி சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது.
இந்த கடையை இடமாற்றம் செய்யக்கோரி, தமிழக முதல்வர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மனு அனுப்பினர்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல்கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பெரிய அளவிலான குற்றச் சம்பவங்கள் நடப்பதற்குள், டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.