/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் பரனுாரில் வாகன ஓட்டிகள் அச்சம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் பரனுாரில் வாகன ஓட்டிகள் அச்சம்
தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் பரனுாரில் வாகன ஓட்டிகள் அச்சம்
தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் பரனுாரில் வாகன ஓட்டிகள் அச்சம்
தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் பரனுாரில் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூன் 18, 2024 05:14 AM

செங்கல்பட்டு, ' சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையின் இருபுறமும், பரனுார், புலிப்பாக்கம், பழவேலி, மாமண்டூர் உள்ளிட்டபல்வேறு இடங்களில், சாலையின் நடுவே பள்ளங்கள் ஏற்பட்டு, அடிக்கடிவிபத்துகள் ஏற்படுகின்றன.
இது குறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது:
திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பரனுார் பகுதியில், சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இந்தபகுதியில் இருசக்கர வாகனங்களை இயக்கும் போது, ஒரே பக்கமாக இழுத்துச் சென்று விபத்து ஏற்படுகிறது.
சாலை சேதமான இடத்தில், கடந்த மாதம் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில், தனியார் கல்லுாரி ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இருப்பினும், இந்த பகுதி யில் சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இரவு நேரங்களில் விளக்குகள் பல இடங்களில் இல்லாததால், புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.