/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கரும்பாக்கம் இருளர் பகுதியில் வடிகால்வாய் அமைக்கப்படுமா? கரும்பாக்கம் இருளர் பகுதியில் வடிகால்வாய் அமைக்கப்படுமா?
கரும்பாக்கம் இருளர் பகுதியில் வடிகால்வாய் அமைக்கப்படுமா?
கரும்பாக்கம் இருளர் பகுதியில் வடிகால்வாய் அமைக்கப்படுமா?
கரும்பாக்கம் இருளர் பகுதியில் வடிகால்வாய் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 29, 2024 10:03 PM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சியில், இருளர் பகுதியில், 30க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில், முறையான வடிகால்வாய் வசதியில்லாததால், அங்குள்ள குளத்தில் நிரம்பும் மழைநீர், இருளர் பகுதியில் சாலையோரம் வழிந்தோடும்.
தற்போது, இப்பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. புதிய சாலைக்காக, மண் கொட்டி உயர்த்தப்பட்டதால், சாலையின் இருபுறமும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு, மழைநீர் வெளியேற முறையான வடிகால்வாய் வசதி இல்லை.
இதனால், மழைநீர், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியும் அதிகரித்து உள்ளது.
எனவே, புதிய சாலை அமைப்பதுபோல், கழிவுநீர், மழைநீர் தேங்காமல் இருக்க, மழைநீர் வடிகால்வாயும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.