/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாய்ந்த நிலையில் உயர்மின் விளக்கு; ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம் சாய்ந்த நிலையில் உயர்மின் விளக்கு; ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்
சாய்ந்த நிலையில் உயர்மின் விளக்கு; ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்
சாய்ந்த நிலையில் உயர்மின் விளக்கு; ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்
சாய்ந்த நிலையில் உயர்மின் விளக்கு; ஊரப்பாக்கத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 29, 2024 10:03 PM

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் பிரதான சாலையில், உயர் கோபுர மின்விளக்கு உள்ளது.
இரும்பால் ஆன அதன் கம்பம், தற்போது சாய்ந்த நிலையில் உள்ளது. அதனால், காற்று மற்றும் மழையில் விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
பிரியா நகர் பிரதான சாலையில், உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இதில், ஐந்து மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது, தற்போது சாய்ந்த நிலையில் உள்ளது.
இதை சீரமைக்கக்கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும், இதுவரை, அதை சீரமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சாய்ந்த நிலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.