/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பூங்காவிற்கு புதிய இயக்குனர் பிரச்னைகள் தீர்க்கப்படுமா? பூங்காவிற்கு புதிய இயக்குனர் பிரச்னைகள் தீர்க்கப்படுமா?
பூங்காவிற்கு புதிய இயக்குனர் பிரச்னைகள் தீர்க்கப்படுமா?
பூங்காவிற்கு புதிய இயக்குனர் பிரச்னைகள் தீர்க்கப்படுமா?
பூங்காவிற்கு புதிய இயக்குனர் பிரச்னைகள் தீர்க்கப்படுமா?
ADDED : ஜூன் 18, 2024 05:22 AM
தாம்பரம், : வண்டலுார் பூங்கா இயக்குனராக இருந்த சீனிவாச ரெட்டிக்கு, 2023ல், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் பதவி உயர்வுவழங்கப்பட்டது. அப்படியிருந்தும், பூங்கா இயக்குனர் பதவியை விடாமல் கூடுதலாக கவனித்து வந்தார்.
இதனால், பூங்காவின் அன்றாடபணிகள் பாதிக்கப்படுவதாக புகார்எழுந்தது. இதையடுத்து, சீனிவாச ரெட்டி விடுவிக்கப்பட்டு, புதிய இயக்குனராக ஆஷிஷ் குமார் ஸ்ரீவச்சவா நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
சமீபகாலமாக, விலங்குகள் இறப்பு மற்றும் கூண்டுகளில் இருந்து தப்பித்து வெளியேறுவது, பராமரிப்பாளர்களை விலங்குகள் தாக்குவது, ஊழியர்களை அதிகாரிகள் தரக்குறைவாக நடத்துவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள ஆஷிஷ் குமார் ஸ்ரீவச்சவா, இது தொடர்பாக ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி, இச்சம்பவங்களை கட்டுப்படுத்தி, பூங்காவை மேம்படுத்த வேண்டும் என, விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.