/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சாலையில் கட்டிய தரைப்பாலம் முழுமை பெறுவது எப்போது? சாலையில் கட்டிய தரைப்பாலம் முழுமை பெறுவது எப்போது?
சாலையில் கட்டிய தரைப்பாலம் முழுமை பெறுவது எப்போது?
சாலையில் கட்டிய தரைப்பாலம் முழுமை பெறுவது எப்போது?
சாலையில் கட்டிய தரைப்பாலம் முழுமை பெறுவது எப்போது?
ADDED : ஜூன் 07, 2024 12:39 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி வசந்தபுரி பகுதியில், மாமல்லபுரம் - திருக்கழுக்குன்றம் சாலையின் குறுக்கில், பல ஆண்டுகளுக்கு முன் குறுகிய குழாய் பாலம் கட்டப்பட்டது.
இத்தடத்தில், பழைய பாலம் பலமிழந்தும், மழைநீர் செல்ல இயலாததாகவும் உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை, அதை அகற்றி புதிய கான்கிரீட் பாலம் கட்ட முடிவெடுத்து, கடந்த மார்ச் மாதம் கட்டியது. போக்கு வரத்தை, சாலையின் வலதுபுறம் அனுமதித்து, தென்புறத்தில் பாலம் கட்டப்பட்டது. அடுத்து, வடபுறம் பாலம் கட்ட வேண்டிய நிலையில், அரைகுறை பாலத்துடன் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளது.
புதிய பாலப் பகுதியில், சாலை சீரமைப்பின்றி கரடுமுரடாக உள்ளதால், எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள், வடபுற சாலையில் மட்டும் விபத்து அபாயத்துடன் கடக்கின்றன. பாலத்தை முழு நீளத்திற்கு கட்டி முடிக்க, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.