/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாழடைந்த சுற்றுலா மையம் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு பாழடைந்த சுற்றுலா மையம் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
பாழடைந்த சுற்றுலா மையம் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
பாழடைந்த சுற்றுலா மையம் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
பாழடைந்த சுற்றுலா மையம் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:37 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில்,பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள் உள்ளன.
இங்கு வரும் சுற்றுலா பயணியர், சிற்பங்களின் வரலாறு, உருவாக்கப் பட்டவிதம், சிற்பங்களுக்கு செல்லும் வழி உள்ளிட்ட விபரங்களை அறிய விரும்புகின்றனர்.
தமிழக அரசின் சுற்றுலா அலுவலகம், மார்க்கெட் பகுதியில் இயங்குவதால், அங்கு பயணியர் செல்ல விரும்புவதில்லை. எனவே, சிற்ப பகுதியில் சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் விளைவாக, தமிழக சுற்றுலாத்துறை பரிசீலித்து, கடற்கரை கோவில் பகுதியில், சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின்கீழ், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுலா கருத்தியல் மையத்தை, கடந்த 2019ல் அமைத்தது.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின்கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனம், உலோக கன்டெய்னர் பெட்டியில், கலையம்ச தோற்றத்தில்,குளிர்சாதன வசதியுடன் இம்மையத்தை அமைத்தது.
சுற்றுலா தகவல்கள் அறிய, இரண்டு தொடுதிரை கணினிகள், சரித்திரதகவல்களுடன் சிற்பங்களின் படங்கள், பிற சுற்றுலா பகுதிகள் குறித்த விளக்கம் உள்ளிட்டவை இம்மையத்தில் அமைக்கப்பட்டன.
கடந்த 2020 செப்.,ல் பயன்பாட்டிற்கு துவக்கப்பட்டு, சில மாதங்களே பயன்பட்டது. பின், சீர்கேடுகளால் பயனின்றி வீணாகியது.
கன்டெய்னர் மீது அமைக்கப்பட்ட கலையம்ச அமைப்புகள் பெயர்ந்து, முற்றிலும் சீரழிந்துள்ளது. பயணியர் குவியும் இடத்தில், அலங்கோலமாக உள்ள இம்மையத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.