/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சமுதாய நலக்கூடம் திறப்பு விழா எப்போது? சமுதாய நலக்கூடம் திறப்பு விழா எப்போது?
சமுதாய நலக்கூடம் திறப்பு விழா எப்போது?
சமுதாய நலக்கூடம் திறப்பு விழா எப்போது?
சமுதாய நலக்கூடம் திறப்பு விழா எப்போது?
ADDED : ஜூலை 21, 2024 06:30 AM
கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, காரணை புதுச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாமில் காரணை புதுச்சேரியை சேர்ந்த மக்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
காரணை புதுச்சேரியில் புதிதாக சமுதாய நலக்கூடம், 51 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு 2017ம் ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.
கட்டப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது வரை திறக்கப்படவில்லை. சமுதாய நலக்கூடத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.