/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டூ - வீலர் பஞ்சராகி கீழே விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு டூ - வீலர் பஞ்சராகி கீழே விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு
டூ - வீலர் பஞ்சராகி கீழே விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு
டூ - வீலர் பஞ்சராகி கீழே விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு
டூ - வீலர் பஞ்சராகி கீழே விழுந்ததில் மாணவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 21, 2024 07:20 AM
கூடுவாஞ்சேரி : சென்னை நெசப்பாக்கம், அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் சண்முகம். இவரது மகன் ஹர்ஷவர்தன், 17. அதே பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வத்தின் மகன் சூர்யா, 17; இருவரும் நண்பர்கள்.
இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு 'யமஹா' இருசக்கர வாகனத்தில், வண்டலுார்- - மண்ணிவாக்கம் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, முன்பக்க டயர் திடீரென பஞ்சரானது. அதில், நிலை தடுமாறி இருவரும் சாலையில் துாக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், சூர்யா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
ஹர்ஷவர்தனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.