/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இறகு பந்து அரங்கம் திறப்பது எப்போது? இறகு பந்து அரங்கம் திறப்பது எப்போது?
இறகு பந்து அரங்கம் திறப்பது எப்போது?
இறகு பந்து அரங்கம் திறப்பது எப்போது?
இறகு பந்து அரங்கம் திறப்பது எப்போது?
ADDED : ஜூன் 01, 2024 04:00 AM
திருப்போரூர், : திருப்போரூரில் அமைக்கப்பட்ட இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட மீன் மார்க்கெட் பகுதியில், கடந்த 2015ல், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
இங்கு, 70 சதவீத பணிகள் முடிந்த நிலையில், 2018ல் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. மின் விளக்கு, தரைப்பகுதி அமைத்தல் போன்ற அடிப்படை பணிகளை முடிக்காமல், நான்கு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
இதனால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, அதன் வளாக பகுதிசீரழிந்து வருகிறது.
பேரூராட்சி நிர்வாகம், உள்விளையாட்டு அரங்கத்தில் விடுபட்ட இதர பணிகளை முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.