ADDED : ஜூன் 24, 2024 02:01 AM
மறைமலை நகர்:ராமாபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ், 22; மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்.
நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, வேலை முடித்து, 'யமஹா ப்பேஷர்' இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
மறைமலை நகர் ஜி.எஸ்.டி., சாலை அருகே, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற 'ஸ்விப்ட்' கார் மோதியதில், மனோஜ் தலை, கால்களில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே மனோஜ் உயிரிழந்தார்.
l பூந்தமல்லி, கரையான்சாவடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 47. நேற்று அதிகாலை, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வதற்காக, ஜி.எஸ்.டி., சாலையை கடந்த போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கார் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.