Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கோவிலில் யோகாவிற்கு மறுப்பு போலீசார் குவிந்ததால் சலசலப்பு

கோவிலில் யோகாவிற்கு மறுப்பு போலீசார் குவிந்ததால் சலசலப்பு

கோவிலில் யோகாவிற்கு மறுப்பு போலீசார் குவிந்ததால் சலசலப்பு

கோவிலில் யோகாவிற்கு மறுப்பு போலீசார் குவிந்ததால் சலசலப்பு

ADDED : ஜூன் 24, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் நிர்வகிக்கும் வேதகிரீஸ்வரர் கோவிலின் மலையடிவாரத்தில் பக்தவத்சலேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவில் வளாக பகுதியில், தனியார் அமைப்பினர், சமய நிகழ்ச்சிகள், யோகா உள்ளிட்டவற்றை, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நடத்துவர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தனியார் அமைப்பினர், நேற்று காலை கோவில் வளாகத்தில் யோகா நிகழ்த்த, நிர்வாகத்திடம் அனுமதி கோரினர்.

கோவில் நிர்வாகம் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக தெரிகிறது. ஆனாலும், நிகழ்வில் பங்கேற்குமாறு, நேற்று முன்தினம் இரவு, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டது.

பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்க, கோவில் நிர்வாகத்தினர், திருக்கழுக்குன்றம் போலீசாரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், நேற்று காலை 6:00 மணிக்கு, கோவிலின் நுழைவாயில் பகுதிகளில் முகாமிட்டனர். கிழக்கு வாயிலை மட்டும் திறக்கப்பட்டு, மற்ற வாயில்கள் மூடப்பட்டன.

ஆனால், எந்தவித அத்து மீறல் முயற்சியும் நடக்காத நிலையில், போலீசார் திரும்பிச் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us