Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை வண்டலுார் கொண்டு வர முயற்சி

ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை வண்டலுார் கொண்டு வர முயற்சி

ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை வண்டலுார் கொண்டு வர முயற்சி

ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை வண்டலுார் கொண்டு வர முயற்சி

ADDED : ஜூலை 28, 2024 12:59 AM


Google News
தாம்பரம், :வண்டலுார் பூங்காவிற்கு ஒட்டகச்சிவிங்கி மற்றும் வரிக்குதிரையை கொண்டு வருவதற்காக, கோல்கட்டா மற்றும் பன்னார்கட்டா வனவிலங்கு பூங்காக்களுக்கு, கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உரியல் பூங்கா ஆணையத்திடம் அனுமதி பெற்று இவற்றை வண்டலுார் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வண்டலுார் பூங்காவில், விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், சில ஆண்டுகளாக அதிகமான விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பல ஆண்டு முயற்சிக்கு பின், சமீபத்தில் ஒரு ஜோடி காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டன.

இங்கு, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை கூண்டுகள் தனித்தனியாக உள்ளன. இங்கு பராமரிக்கப்பட்டு வந்த, டீனா என்ற 18 வயது பெண் வரிக்குதிரை, உடல்நிலை பாதிக்கப்பட்டு, 2022, மே மாதம் இறந்தது. இதனால், அந்த கூண்டு காலியாகவே உள்ளது.

ஒட்டகச்சிவிங்கி கூண்டில், ஆயிஷா என்ற 28 வயது பெண் ஒட்டகச்சிவிங்கி மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜோடியாக, ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கி கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த இரண்டு விலங்குகளையும், பரிமாற்ற திட்டத்தின் கீழ் கொண்டு வர, பல்வேறு முறை முயற்சிகள் எடுக்கப்பட்டு, நிறைவேறவில்லை.

இந்தியாவில் சில பூங்காக்களில் மட்டுமே வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி உள்ளன. அந்த பூங்காக்களை அணுகிய போது, மாற்றாக வெள்ளைப் புலி, வங்கப் புலி, காட்டு மாடு உள்ளிட்ட பல விலங்குகளை பரிமாற்றத்தில் கேட்டனர்.

அதனால், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருவது குறித்து, மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

அதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், ஒட்டகச்சிவிங்கி கேட்டு கோல்கட்டா பூங்காவிற்கும், வரிக்குதிரை கேட்டு கர்நாடகாவில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்காவிற்கும் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பூங்கா நிர்வாகங்கள் சம்மதம் தெரிவித்தவுடன், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அனுமதி பெற்று, ஒட்டகச்சிவிங்கி மற்றும் வரிக்குதிரை கொண்டு வரப்படும்.

மூன்று, நான்கு மாதங்களில் நடைமுறைகள் முடிக்கப்பட்டு, புதிய விலங்குகள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us