Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவி

வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவி

வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவி

வேளாண் கூட்டுறவு சங்கம் சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவி

ADDED : ஜூலை 28, 2024 12:55 AM


Google News
செங்கல்பட்டு:காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கடப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், பல்வேறு தொழில்கள் துவங்க, 73 பயனாளிகளுக்கு நேற்று முன்தினம் கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் வாயிலாக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சிறு வணிகக்கடன், ஆதரவற்ற கைம்பெண் மற்றும் சம்பளக்கடன் என, 69 பயனாளிகளுக்கு, 6.59 லட்சம் ரூபாய் கடன் வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

கடப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், நான்கு பயனாளிகள், 4.74 லட்சம் ரூபாய் கடன் வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்பின், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், 73 பயனாளிகளுக்கும், 1.13 கோடி ரூபாய் கடன் தொகையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவமலர், மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us