/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தொழிலாளரிடம் போன், பணம் பறித்தோர் கைது தொழிலாளரிடம் போன், பணம் பறித்தோர் கைது
தொழிலாளரிடம் போன், பணம் பறித்தோர் கைது
தொழிலாளரிடம் போன், பணம் பறித்தோர் கைது
தொழிலாளரிடம் போன், பணம் பறித்தோர் கைது
ADDED : ஜூலை 17, 2024 12:57 AM
சேலையூர், சேலையூர், ஐ.ஏ.எப்., சாலையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீனதயாளன், 24, என்பவர் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத மூன்று பேர், கட்டடத்தின் உள்ளே புகுந்து, கத்தி முனையில் வடமாநில தொழிலாளர்களின் ஆறு மொபைல் போன்கள், 13,000 ரூபாய் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக' குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், சேலையூரில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த மணிகண்டன், 33, கொத்தனார் வேலை செய்து வந்த கர்ணா, 25, எலக்ட்ரீசியன் அஜித், 23, ஆகிய மூன்று பேரை, நேற்று கைது செய்தனர்.