ADDED : ஜூலை 17, 2024 12:57 AM
பம்மல், பொழிச்சலுார், மல்லிமா நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 70. மகள் பாக்கியலட்சுமி, 38. மகன் ராஜன், 36. மூன்று பேரும், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜன், பெயின்டிங் வேலை செய்து வருகிறார்.
பாக்கியலட்சுமி மாற்றுத்திறனாளி ஆவார். அவரை தாய் சாந்தி, அருகில் இருந்து கவனித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜன், தினமும் குடித்து வந்து, தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வழக்கம்போல், நேற்று முன்தினம் நள்ளிரவு மது அருந்தி வந்து, தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை சாந்தி கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த ராஜன், வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, தாய் மற்றும் சகோதரியின் தலையில் வெட்டினார்.
இருவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். உடனே, பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில், ராஜன் தன் தலையில் தானேவெட்டிக் கொண்டார்.
மூன்று பேரும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின், செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.