/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
ADDED : ஜூலை 12, 2024 08:00 PM
சேலையூர்:சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 71. ஜூலை 8ம் தேதி, வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பினார். சுதர்சன் நகர் முதல் குறுக்குத் தெருவில், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், விஜயலட்சுமியின், 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு மாயமானார்.
புகாரின்படி, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். நகை பறித்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாபு, 42, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், இவர், மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 5 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.