/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சிங்கபெருமாள் கோவிலில் டூ- - வீலர் மோதி வாலிபர் பலிசிங்கபெருமாள் கோவிலில் டூ- - வீலர் மோதி வாலிபர் பலி
சிங்கபெருமாள் கோவிலில் டூ- - வீலர் மோதி வாலிபர் பலி
சிங்கபெருமாள் கோவிலில் டூ- - வீலர் மோதி வாலிபர் பலி
சிங்கபெருமாள் கோவிலில் டூ- - வீலர் மோதி வாலிபர் பலி
ADDED : ஜூலை 17, 2024 01:02 AM
மறைமலை நகர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுபகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 34. சமையல் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில், சமையல் வேலைக்காக வந்திருந்தார். இரவு, வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல, திருத்தேரி பகுதி ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, சிங்கபெருமாள் கோவிலில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற கே.டி.எம்., டியூக் இருசக்கர வாகனம், பிரகாஷ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ், சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயமடைந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார்,படுகாயம் அடைந்த நபரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிரகாஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், கே.டி.எம்., பைக்கில் வந்தவர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்வரன், 23, என்பதும், மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.