/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டேபிள் டென்னிஸ் அணிக்கு ஸ்வீடன் பயிற்சியாளர் டேபிள் டென்னிஸ் அணிக்கு ஸ்வீடன் பயிற்சியாளர்
டேபிள் டென்னிஸ் அணிக்கு ஸ்வீடன் பயிற்சியாளர்
டேபிள் டென்னிஸ் அணிக்கு ஸ்வீடன் பயிற்சியாளர்
டேபிள் டென்னிஸ் அணிக்கு ஸ்வீடன் பயிற்சியாளர்
ADDED : ஜூன் 04, 2024 05:28 AM
சென்னை : சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், வரும் ஆக., 22 முதல் செப்., 7 வரை, அல்டிமேட் டேபிள் டென்னிஸ் எனும் தேசிய தொடர் போட்டிகள் நடக்க உள்ளன.
இதை, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் நீரஜ் பஜாஜ், விட்டா டானி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இதில், மதாபாத் எஸ்.ஜி., பைபர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ், கோவா சேலஞ்சர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டில்லி டி.டி.சி., - யு மும்பா டி.டி., புனேரி பல்தான், பெங்களூரு ஸ்மாஷர்ஸ் ஆகிய எட்டு அணிகள் மோதஉள்ளன.
இந்நிலையில், நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் எட்டு அணிகளுக்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்களை, அந்தந்த அணிகள் தேர்வு செய்தன.
அதில், சென்னை லயன்ஸ் அணி, ஸ்வீடன் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளரான டோபியாஸ் பெர்க்மேனை தேர்வு செய்துள்ளது. இவருடன், இந்தியாவின் சுபின் குமாரும் இணைந்து செயல்பட உள்ளார்.