ADDED : ஜூன் 18, 2024 05:57 AM
சென்னை, சென்னை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 18. நேற்று மதியம் 12.30 மணிக்கு, தன் நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கரணை அணை ஏரியில் குளிக்கச் சென்றார்.
ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற தீபக், நீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து நண்பர்கள் அளித்த தகவல்படி வந்த வேளச்சேரி தீயணைப்பு துறையினர் தேடியும், உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, மெரினா ஸ்கூப்பிங் டைவிங் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, தீபக் உடல் மீட்கப்பட்டது.