/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ எஸ்.ஆர்.எம்., முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா எஸ்.ஆர்.எம்., முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா
எஸ்.ஆர்.எம்., முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா
எஸ்.ஆர்.எம்., முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா
எஸ்.ஆர்.எம்., முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா
ADDED : ஜூலை 11, 2024 12:52 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கானஅறிமுக நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
இதில், கணிதத்துறை தலைவர் லலித் குமார் வரவேற்புரை வழங்கினார். எஸ்.ஆர்.எம்., கல்விக் குழுமத்தின் இயக்குனர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழருவி மணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மாணவர்களுக்கான கல்வியின் சிறப்பு குறித்தும், மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் குறித்தும்பேசினார். காட்சி தகவலியலில் துறை தலைவர்நடராஜன் நன்றியுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்,கல்லுாரி முதல்வர் வாசுதேவராஜ், துணை முதல்வர் மதியழகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.