/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு தின விழா கோலாகலம் சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு தின விழா கோலாகலம்
சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு தின விழா கோலாகலம்
சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு தின விழா கோலாகலம்
சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு தின விழா கோலாகலம்
ADDED : ஜூலை 28, 2024 06:51 AM

சென்னை : அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் வளாகத்தில், சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு தின விழா, சர்ச் பார்க் வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில், பள்ளியின் தாளாளர் லீலா, விழாவை துவக்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி, போட்டியை துவக்கி வைத்தார். பின், பள்ளியின் முதல்வர் பிரபா வரவேற்பு உரையாற்றினார்.
மாணவர்கள், தனித்தனி விளையாட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு வண்ண ஆடை என, பலவித வண்ண சீருடைகளில் மாணவர்கள் அணிவகுத்தனர்.
பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குழு போட்டிகள், கிளாசிக்கல் யோகா, கராத்தே உள்ளிட்டவற்றில், மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார்.
அப்போது அவர், ''பல தலைவர்களை உருவாக்கும் பள்ளியாகவும், ஒரு தனித்துவம் வாய்ந்த பள்ளியாகவும் சேக்ரட் ஹார்ட் பள்ளியை பார்க்கிறேன்,'' என பேசி, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்வில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் வித்யா ஹரி ஐயர் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.