Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 'பக்' கோப்பை கால்பந்து: ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்

'பக்' கோப்பை கால்பந்து: ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்

'பக்' கோப்பை கால்பந்து: ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்

'பக்' கோப்பை கால்பந்து: ஒய்.எம்.சி.ஏ., அணி சாம்பியன்

ADDED : ஜூலை 28, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
சென்னை : நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி சார்பில், அதன் நிறுவனர் ஹாரி குரோ பக்கை நினைவுகூரும் வகையில், 'பக்' கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், வாலிபால், தடகளம், பேட்மின்டன், பால் பேட்மின்டன், குத்துச்சண்டை உட்பட 18போட்டிகள் நடக்கின்றன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 5,000 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

ஆடவருக்கான கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி அணி, 3 - 2 என்ற கோல் கணக்கில் நியூ கல்லுாரியை தோற்கடித்தது. மற்றொருஅரையிறுதியில், லயோலா அணி, 5 - 4 என்ற கணக்கில்நசரத் கல்லுாரியைவீழ்த்தியது.

நேற்று காலை நடந்த இறுதிப்போட்டியில், ஒய்.எம்.சி.ஏ., மற்றும் லயோலா அணிகள் மோதின. பலம் வாய்ந்த இரு அணிகளும், போட்டியின் துவக்கத்தில் இருந்தே சமநிலையில் வந்தனர்.

முடிவில், 7 - 6 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏ.,கல்லுாரி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது. மற்றபோட்டிகள் தொடர்ந்துநடக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us