/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஒழவெட்டி பள்ளி வளாகத்தில் முட்புதரை அகற்ற கோரிக்கை ஒழவெட்டி பள்ளி வளாகத்தில் முட்புதரை அகற்ற கோரிக்கை
ஒழவெட்டி பள்ளி வளாகத்தில் முட்புதரை அகற்ற கோரிக்கை
ஒழவெட்டி பள்ளி வளாகத்தில் முட்புதரை அகற்ற கோரிக்கை
ஒழவெட்டி பள்ளி வளாகத்தில் முட்புதரை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 25, 2024 05:16 AM

சித்தாமூர் சித்தாமூர் அருகே ஜமீன்எண்டத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட ஒழவெட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்படுகிறது. இதில், 20 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
மேலும், அதே வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு, 10 குழந்தைகள் உள்ளனர்.
பள்ளி வளாகம் முறையான பராமரிப்பு இன்றி முட்புதர் மண்டி உள்ளதால், விஷப்பூச்சிகளின் தங்கும் இடமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால், பள்ளி மற்றும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, குழந்தைகளின் நலன் கருதி, பள்ளி வளாகத்தில் உள்ள புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.