/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தெருவிளக்கு பராமரிப்பு படுமோசம் புதிதாக ஊழியரை நியமிக்க கோரிக்கை தெருவிளக்கு பராமரிப்பு படுமோசம் புதிதாக ஊழியரை நியமிக்க கோரிக்கை
தெருவிளக்கு பராமரிப்பு படுமோசம் புதிதாக ஊழியரை நியமிக்க கோரிக்கை
தெருவிளக்கு பராமரிப்பு படுமோசம் புதிதாக ஊழியரை நியமிக்க கோரிக்கை
தெருவிளக்கு பராமரிப்பு படுமோசம் புதிதாக ஊழியரை நியமிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2024 12:46 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் 15 வார்டுகள் உள்ளன. குறிப்பிட்ட சில வார்டுகள்,பாரம்பரிய சின்னங்கள் உள்ள சுற்றுலா இடமாகவும் விளங்குகின்றன.இரவு நேர வெளிச்சம் கருதி, பேரூராட்சி நிர்வாகம், தெருக்களில் மின்விளக்குகள் மற்றும் முக்கியசந்திப்புகளில் உயர் கோபுர விளக்குகள் அமைத்துபராமரிக்கிறது.
தரமற்ற மின்சாதன பொருட்களால் அடிக்கடி பழுது மற்றும் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின்விளக்கு பழுதடைந்து தெருக்களில் இருள் சூழும்.
இத்தகைய பழுதுகளை சரிசெய்ய, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மூர்த்தி என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த மே 12ம் தேதி உயிரிழந்தார். இரண்டு மாதங்கள் கடந்தும், புதிதாக மின் ஊழியர் நியமனம் செய்யவில்லை.
மின்சார பணிக்கு, அதற்கான தகுதி பெற்ற ஊழியரை நியமிக்காமல், துாய்மைப் பணியாளர், ஒப்பந்த ஊழியர் வாயிலாக பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதனால், அவர்களால் முழுமையாக பழுது நீக்க இயலாமல், பல தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை தவிர்க்க, ஐ.டி.ஐ.,யில், எலக்ட்ரீஷியன் படித்து தேர்ச்சிபெற்றவரை, பணியில் நியமிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.