/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம் செங்கையில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்
செங்கையில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்
செங்கையில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்
செங்கையில் வரும் 19ல் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 12, 2024 12:47 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக, வரும் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், தனியார் துறை நிறுவனங்கள்மற்றும் திறன் பயிற்சிஅளிக்கும் நிறுவனங்கள், நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்க உள்ளனர். விருப்பமுள்ளவர்கள், WWW.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 8, 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, இன்ஜினியரிங், - ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படித்திருக்க வேண்டும். மேலும், செவிலியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மேலும், 18 - 40 வயது வரை உள்ளவர்கள், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன், 19ம் தேதி காலை 10:00 - 2:00 மணி வரை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
'வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது' எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, 044- - 2742 6020 மற்றும் 94868 70577 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.