/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது செய்யூர் மருத்துவமனையில் அவதி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது செய்யூர் மருத்துவமனையில் அவதி
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது செய்யூர் மருத்துவமனையில் அவதி
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது செய்யூர் மருத்துவமனையில் அவதி
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது செய்யூர் மருத்துவமனையில் அவதி
ADDED : ஜூலை 03, 2024 12:29 AM

செய்யூர்:செய்யூர் பஜார்வீதியில், செய்யூர் அரசு மருத்துவமனை உள்ளது. நல்லுார், புத்துார்,சித்தாற்காடு, தேவராஜபுரம், அம்மனுார்உள்ளிட்ட, 20க்கும்மேற்பட்ட கிராம மக்கள், இந்த மருத்துவமனையை பயன்படுத்திவருகின்றனர்.
தினசரி நுாற்றுக் கணக்கான புறநோயாளிகள், பார்வையாளர்கள், உள்நோயாளிகள் மற்றும் சுற்றுப்புற பகுதியினர் அவசர சிகிச்சைக்குவந்து செல்கின்றனர்.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, 2019ம் ஆண்டு, 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு,பொதுமக்கள்பயன்படுத்தி வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் குடிநீர் சுத்திகரிப்புஇயந்திரம் பழுதடைந்தது. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சீரமைக்கப்படாததால், மினி டேங்கில் இருந்து நேரடியாக வரும் தண்ணீரை, மருத்துவ மனைக்கு வந்துசெல்லும் பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
மினி டேங்க் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது, ஆகையால், குடிநீரின் பாதுகாப்பு கோள்விக்குறியாகி உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் அரசு மருத்துவமனையில், பழுதடைந்துள்ளகுடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து, துாய்மையானகுடிநீர் வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.