/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தமிழக அரசை கண்டித்து போராட்டம் தமிழக வணிகர் சங்க பேரவை முடிவு தமிழக அரசை கண்டித்து போராட்டம் தமிழக வணிகர் சங்க பேரவை முடிவு
தமிழக அரசை கண்டித்து போராட்டம் தமிழக வணிகர் சங்க பேரவை முடிவு
தமிழக அரசை கண்டித்து போராட்டம் தமிழக வணிகர் சங்க பேரவை முடிவு
தமிழக அரசை கண்டித்து போராட்டம் தமிழக வணிகர் சங்க பேரவை முடிவு
ADDED : ஜூலை 03, 2024 12:28 AM

மாமல்லபுரம்:வாடகை கட்டட கடை உரிமம் புதுப்பிப்பு சட்டம் உள்ளிட்ட பாதிப்புகளால், தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் தெரிவித்தனர்.
இப்பேரவையின் மாநில ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில், மாமல்லபுரம் அடுத்த பேரூரில் நேற்று நடந்தது. பொதுச்செயலர் சவுந்தர்ராஜன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், பேரவை நிர்வாகிகள், சங்க வளர்ச்சி, புதிய சங்க உருவாக்கம், அரசு கட்டடங்களில் இயங்கும் கடைகளில் வாடகை பிரச்னை, வியாபாரிகளுக்கு ரவுடிகள் அச்சுறுத்தல், தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.
கார்ப்பரேட், ஆன்லைன் வணிகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்து,சில்லரை வணிகத்தை பாதுகாக்க வலியுறுத்தினர். 41ம் ஆண்டு மாநில மாநாட்டு வெற்றிக்காக, நிர்வாகிகளை பாராட்டினர்.
பேரவை பொதுச்செயலர் சவுந்தர்ராஜன் கூறியதாவது:
வாடகை கட்டடத்தில் இயங்கும் கடைகளுக்கு, கட்டட உரிமையாளர் சொத்து வரி செலுத்தினால் மட்டுமே, கடை உரிமம் புதுப்பிக்கப்படும் என, தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டம் இயற்றியுள்ளது.
இதனால், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசால் அமைக்கப்பட்ட வணிகர் நல வாரியம் முறையாக செயல்படவில்லை. அதை செயல்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரிகளை குறைக்க, மத்திய அரசிடம் முறையிட்டும் நடவடிக்கையில்லை. கார்ப்பரேட், ஆன்லைன் வணிகத்தால், சில்லரை வியாபாரம் பாதிக்கப்படுகிறது.
மதுபோதையுடன் கடைக்கு வருவோரால், வியாபாரிகள் அச்சப்படுகின்றனர்.
எனவே, தமிழக அரசை கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.