/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெருங்களத்துார் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் பெருங்களத்துார் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெருங்களத்துார் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெருங்களத்துார் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெருங்களத்துார் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜூலை 17, 2024 12:52 AM

குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சி எல்லையில் உள்ள ஜி.எஸ்.டி., தாம்பரம் - வேளச்சேரி, தாம்பரம் - முடிச்சூர், பல்லாவரம் - திருநீர்மலை, பல்லாவரம் - குன்றத்துார், காந்தி, ராஜாஜி, குரோம்பேட்டை சி.எல்.சி., ராதா நகர், தர்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக, தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து, தாம்பரம் மாநகராட்சி எல்லையிலுள்ள சாலைகளில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
ஜி.எஸ்.டி., சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
பல்லாவரம் - குன்றத்துார் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
இதைத் தொடர்ந்து, நான்காவது மண்டலம், பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி சார்பில், கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சில கடைக்காரர்கள் தாங்களாகவே அகற்றிக் கொண்டனர். பல கடைகள் அகற்றப்படவில்லை.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன்,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக, அச்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை நேற்று அதிரடியாக அகற்றினர்.