/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மின் கட்டணம் உயர்வால் பாதிப்பு வணிகர் சங்கம் போராட்ட அறிவிப்பு மின் கட்டணம் உயர்வால் பாதிப்பு வணிகர் சங்கம் போராட்ட அறிவிப்பு
மின் கட்டணம் உயர்வால் பாதிப்பு வணிகர் சங்கம் போராட்ட அறிவிப்பு
மின் கட்டணம் உயர்வால் பாதிப்பு வணிகர் சங்கம் போராட்ட அறிவிப்பு
மின் கட்டணம் உயர்வால் பாதிப்பு வணிகர் சங்கம் போராட்ட அறிவிப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:51 AM

மாமல்லபுரம், தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிடாவிட்டால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், அதன் தலைவர் விக்கிரமராஜா தலைமையில், மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. பொதுச்செயலர் கோவிந்தராஜுலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது:
மின் கட்டணம் ஏற்கனவே அதிகமாக உள்ளதால், வியாபாரிகள் தடுமாறுகின்றனர். தற்போது, மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
வணிகத்திற்கு பயன்படுத்தும் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இதை ஏற்க முடியாத நிலையில், நாங்கள் உள்ளோம். கட்டண உயர்வை, முதல்வர் உடனே திரும்ப பெற வேணடும்.
ஜி.எஸ்.டி., வரியில் 1,000 ரூபாய் நிலுவை வைத்திருந்தாலும், பல லட்சம் ரூபாய் அபராதம், வட்டி விகிதம் என்றெல்லாம் விதிக்கப்படுகிறது. அவை, 2017ல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், கணக்குகளை சீராய்ந்து ஒழுங்குபடுத்த வேண்டும். விதிமுறைகளில், மத்திய அரசு தளர்வு ஏற்படுத்தி, எளிமைப்படுத்த வேண்டும்.
மத்திய நிதியமைச்சரை நாங்கள் சந்தித்த பின், விதிகள் மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். மாற்றப்படாவிட்டால், டில்லியில் போராடுவோம்.
காவல் துறையினர் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.
சாமானிய வணிகர்களை பாதுகாக்க, அரசு முன்வர வேண்டும். அவற்றை தடை செய்யும் வாய்ப்பாக, பிரதமர், முதல்வர் ஆகியோர் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். கடைகள் 24 மணி நேரமும் இயங்கலாம் என, முதல்வர் தெளிவாக கூறியுள்ளார்.
ஆனால், காவல் துறையினர், இரவு 10:00 மணி; 11:00 மணி என்றெல்லாம், மாவட்ட வாரியாக கடை மூடும் நேரத்தை நிர்ணயித்துள்ளனர்.
கடை இயங்க, அத்துறை தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்காகவும் காவல் இயக்குனரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.