/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை சீரமைப்பு மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை சீரமைப்பு
மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை சீரமைப்பு
மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை சீரமைப்பு
மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை சீரமைப்பு
ADDED : ஜூலை 31, 2024 02:49 AM

சித்தாமூர்:சித்தாமூர் பகுதியில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இது, சூணாம்பேடு, சித்தாமூர், நுகும்பல் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலை.
இந்த சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இல்லீடு, நுகும்பல், சூணாம்பேடு உள்ளிட்ட பகுதியில் சாலை சேதமடைந்து இருந்ததால், தினசரி சாலையில் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் விவசாய வேலைக்குச் செல்வோர் கடுமையாக சிரமப்பட்டு வந்தனர்.
அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வந்தது. ஆகையால், சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பாக, சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.