/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் முதல்வருக்கு பொதுமக்கள் வரவேற்பு செங்கையில் முதல்வருக்கு பொதுமக்கள் வரவேற்பு
செங்கையில் முதல்வருக்கு பொதுமக்கள் வரவேற்பு
செங்கையில் முதல்வருக்கு பொதுமக்கள் வரவேற்பு
செங்கையில் முதல்வருக்கு பொதுமக்கள் வரவேற்பு
ADDED : மார் 11, 2025 11:33 PM

செங்கல்பட்டு:திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு வரை, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று, மக்கள் வரவேற்பு அளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் , செங்கல்பட்டிற்கு வந்தார். அவருக்கு, திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு வரை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதேபோன்று, செங்கல்பட்டு அண்ணாநகர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சப் - கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில், சாலையில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் மற்றும் தி.மு.க., கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது முதல்வர், பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களுடன் 'செல்பி' புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகரமன்ற துணைத்தலைவர் அன்புச்செல்வன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும், மூத்த வழக்கறிஞருமான கனகராஜ், தி.மு.க., நகரச் செயலர் நரேந்திரன் வனக்குழு தலைவர் திருமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.