/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 10, 2024 12:19 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு, பல்வேறு வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி, பிரெய்லி ரீடர், சக்கர நாற்காலிகள், பிரெய்லி கை கடிகாரம் வழங்க கோரி, மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் சில நாட்களுக்கு முன் மனு அளித்தனர்.
இந்த மனுக்களை பரிசீலனை செய்த கலெக்டர், உபகரணங்கள் வழங்க, மாற்றுத்திறனாளி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சமூக பொறுப்பு நிதியிலிருந்து 1.35 லட்சம் ரூபாய் மதிப்பில், காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி நான்கு பேருக்கும், சக்கர நாற்காலி நான்கு பேருக்கும். பிரெய்லி கை கடிகாரம் 19 பேருக்கு வழங்கப்பட்டன.
மேலும், கார்னர் சேர் இரண்டு பேருக்கும், பிரெய்லி ரீடர் ஒருவருக்கு என, 30 பேருக்கு உபகரணங்களை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். இதில், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.