/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஐ.டி.ஐ.,யில் வரும் 15 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு ஐ.டி.ஐ.,யில் வரும் 15 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
ஐ.டி.ஐ.,யில் வரும் 15 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
ஐ.டி.ஐ.,யில் வரும் 15 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
ஐ.டி.ஐ.,யில் வரும் 15 வரை மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
ADDED : ஜூலை 09, 2024 11:49 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில், வரும் 15ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, கடந்த மே மாதம் நடைபெற்றது.
இச்சேர்க்கைக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் விண்ணப்பித்தனர்.
தற்போது, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, மொபைல் போன் எண்கள்: 94990 55673, -99629 86696 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.