/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
கலை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 05, 2024 12:34 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு, சான்றிதழ்கள் மற்றும்பரிசுகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப் பட்டன.
குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய கலைப்பிரிவுகளில், கடந்த மார்ச் மாதம், செங்கல்பட்டில் போட்டிகள் நடந்தன.
இவற்றில் முதல் பரிசு பெற்ற 15 பேருக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.