/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ரெட்டிப்பாளையம் சாலையில் கருவேல மரங்களால் ஆபத்து ரெட்டிப்பாளையம் சாலையில் கருவேல மரங்களால் ஆபத்து
ரெட்டிப்பாளையம் சாலையில் கருவேல மரங்களால் ஆபத்து
ரெட்டிப்பாளையம் சாலையில் கருவேல மரங்களால் ஆபத்து
ரெட்டிப்பாளையம் சாலையில் கருவேல மரங்களால் ஆபத்து
ADDED : ஜூலை 05, 2024 12:33 AM

மறைமலை நகர்,:காட்டாங்கொளத்துார்ஒன்றியம், பாலுார் - ரெட்டிப்பாளையம் சாலை, 5 கி.மீ., துாரம் உடையது.
இந்த சாலையின் ஓரம், பல இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன.
இது குறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில், அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் செங்கல் சூளைக்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகள் சென்று வருகின்றன.
சாலையை, சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாமல் தடுமாறு கின்றனர்.
மேலும், இந்த சாலையில் இரவு நேரங்களில் விளக்குகள் இல்லாததால், சீமைக் கருவேல மரங்கள் இருப்பதுதெரியாமல் விபத்தில் சிக்கிவருகின்றனர். எனவே, இந்த சாலையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற, துறை சார்ந்தஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.