/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் காய்கறி விலை உயர்வு எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை செங்கையில் காய்கறி விலை உயர்வு எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை
செங்கையில் காய்கறி விலை உயர்வு எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை
செங்கையில் காய்கறி விலை உயர்வு எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை
செங்கையில் காய்கறி விலை உயர்வு எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை
ADDED : ஜூலை 19, 2024 12:30 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி மார்க்கெட், மகேந்திரா சிட்டி அருகில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து, காரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும், எலுமிச்சை பழம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்ற பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த காய்கறிகளை, புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில்லறை விற்பனை வியாபாரிகள் வாங்கி சென்று, தங்களின் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
மார்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்து, கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை ஏறுமுகத்தில் உள்ளன.
மேலும், ஆடி மாதம் துவக்கி உள்ளதால், ஒரு கிலோ எலுமிச்சை பழம் சில்லறை விற்பனையில், கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:
எலுமிச்சை பழம் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆடி மாதம் பிறந்துள்ளதால், அம்மன் பக்தர்கள் கோவிலுக்கு அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இந்த மாதம் முழுதும், விலை சற்று கூடுதலாகவே இருக்கும்.
இவ்வாறு கூறினர்.