/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கலெக்டரிடம் வண்டலுார் பூங்கா தினக்கூலி ஊழியர்கள் மனு கலெக்டரிடம் வண்டலுார் பூங்கா தினக்கூலி ஊழியர்கள் மனு
கலெக்டரிடம் வண்டலுார் பூங்கா தினக்கூலி ஊழியர்கள் மனு
கலெக்டரிடம் வண்டலுார் பூங்கா தினக்கூலி ஊழியர்கள் மனு
கலெக்டரிடம் வண்டலுார் பூங்கா தினக்கூலி ஊழியர்கள் மனு
ADDED : ஜூலை 23, 2024 01:20 AM
செங்கல்பட்டு,
வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தினக்கூலி ஊழியர்களுக்கு, சம்பளத்தை உயர்த்தி வழங்கக் கோரி, கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தினக்கூலி ஊழியர்கள், கலெக்டர் அருண்ராஜிடம் அளித்த மனு வருமாறு:
வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் பணியில், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 7ம் தேதி, விலங்கு பராமரிப்பு மற்றும் அனைத்து வகையான பணிகளை செய்யும் தினக்கூலி ஊழியர்களுக்கு, தினக் கூலியை நிர்ணயித்து தமிழக அரசு அறிக்கைவெளியிட்டது.
காட்டுப்பாக்கம் கால்நடை மருத்துவ அறிவியல்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு, 747 ரூபாய் வழங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், எங்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு மீது விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க, உயிரியல் பூங்கா அதிகாரிக்குகலெக்டர் பரிந்துரை செய்தார்.