Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ நல்லான்செட்டிகுளம் மேம்படுத்த ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு

நல்லான்செட்டிகுளம் மேம்படுத்த ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு

நல்லான்செட்டிகுளம் மேம்படுத்த ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு

நல்லான்செட்டிகுளம் மேம்படுத்த ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு

ADDED : ஜூலை 23, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர், திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில், திருவஞ்சாவடி தெரு உள்ளது. இங்குள்ள கெங்கையம்மன் கோவில் அருகே, நல்லான்செட்டி குளம் உள்ளது.

வறட்சி காலத்திலும் தண்ணீர் வற்றாமல்இருக்கும் இக்குளம்,சுற்றுப் பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், படித்துறைகள்மற்றும் கரைகள் அமைத்து சீரமைக்கப்பட்டன.ஆனால், குளம் துார் வாரப் படவில்லை.

தற்போது, குளத்தினுள் ஏராளமான ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் பாசிகளுடன் குப்பை கழிவுகள் அடர்ந்து காணப்படுகின்றன.

குளத்தின் கரைப்பகுதியை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கின்றன. குளத்தை சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என, கடந்த ஜூன் 15ம் தேதி, நம்நாளிதழில் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக, கலெக்டர் அருண்ராஜ் குளத்தை ஆய்வு செய்து, விரைவில் சீரமைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, குளத்தை துார் வாரி, சுற்றுச்சுவர், நடைபாதை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், திட்ட மதிப்பீடு தயாரிப்புக்கு அளவீடு செய்யப்பட்டது.

அளவீடு பணி முடிந்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நிலையில், பேரூராட்சி பொதுநிதி திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்போரூர்- - நெம்மேலி சாலை நுாலகம் அருகே உள்ள அண்ணா குளத்தையும் மேம்படுத்த, மேற்கண்ட திட்டத்தின் கீழ், 3 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us