/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாநகர பேருந்துக்குள் மழை நனைந்தபடி பயணியர் அவதி மாநகர பேருந்துக்குள் மழை நனைந்தபடி பயணியர் அவதி
மாநகர பேருந்துக்குள் மழை நனைந்தபடி பயணியர் அவதி
மாநகர பேருந்துக்குள் மழை நனைந்தபடி பயணியர் அவதி
மாநகர பேருந்துக்குள் மழை நனைந்தபடி பயணியர் அவதி
ADDED : ஜூன் 08, 2024 12:01 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு துவங்கிய மழை, இரவு 8:00 மணி வரை, பல்வேறு பகுதிகளில் விடாது பெய்தது.
அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தடம் எண்: எம்500 மாநகர பேருந்தின் ஜன்னல் பக்கத்தின் மேற்பகுதியில், மழைநீர் உள்ளே ஒழுகியது. இதனால், பயணியர் நனைந்தபடியே தாம்பரம் வரை பயணம் செய்தனர்.