/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிளாம்பாக்கம் போக்குவரத்து குளறுபடி ரயில்களில் முண்டியடிக்கும் பயணியர் கிளாம்பாக்கம் போக்குவரத்து குளறுபடி ரயில்களில் முண்டியடிக்கும் பயணியர்
கிளாம்பாக்கம் போக்குவரத்து குளறுபடி ரயில்களில் முண்டியடிக்கும் பயணியர்
கிளாம்பாக்கம் போக்குவரத்து குளறுபடி ரயில்களில் முண்டியடிக்கும் பயணியர்
கிளாம்பாக்கம் போக்குவரத்து குளறுபடி ரயில்களில் முண்டியடிக்கும் பயணியர்
ADDED : ஜூன் 16, 2024 12:29 AM

மாமல்லபுரம்:சென்னை மாநகரில், வெளியூருக்கான புறநகர் பேருந்து நிலையம், கடந்த 2002 முதல், சென்னை கோயம்பேடு பகுதியில் இயங்கியது.
அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் நிறுவன ஆம்னி பேருந்துகளை, அப்பகுதியிலிருந்து இயக்கிய நிலையில், நாளடைவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை அடுத்த வண்டலுார் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பகுதியில், புதிதாக புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு இதை துவக்கி வைத்தார். தென்மாவட்ட அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், சில மாதங்களாக இங்கிருந்தே இயக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு, குறைவான அளவிலேயே இயக்கப்படும் மாநகர் பேருந்துகள், சென்னை - கிளாம்பாக்கம் இடையிலான போக்குவரத்து நெரிசல் ஆகிய பிரச்னைகளால், கிளாம்பாக்கத்திற்கு செல்வதற்கே, பயணியர் அவதிப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி, கிளாம்பாக்கத்தில் வெளியூர் பேருந்துகளுக்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேருந்து முனையத்தில், பயணியருக்கான அத்யாவசிய வசதிகள் இல்லாததாலும் சென்னை பயணியர் அங்கு செல்வதை தவிர்க்கின்றனர்.
சென்னையிலிருந்து தென்மாவட்ட பகுதிகளுக்கு, பல ரயில்கள் இயங்கும் நிலையில், பேருந்து விருப்ப பயணியர், தற்போது ரயிலில் பயணிப்பதையே விரும்புகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட பயணியர், செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து செல்கின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைவு.
எனினும், நின்று கொண்டாவது பயணம் செய்து விடலாம் என கருதி, ரயில்களையே பயணியர் நாடுகின்றனர்.
நேற்று துவங்கி, நாளை வரை தொடர் விடுமுறை என்பதால், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், பயணியர் குவிந்தனர்.
திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்களில், பயணியர் நெருக்கியடித்து, படியிலும் அபாயத்துடன் நின்றபடி பயணம் செய்தனர்.