/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பள்ளிகள், அங்கன்வாடிகள் புதிய கட்டடங்கள் திறப்பு பள்ளிகள், அங்கன்வாடிகள் புதிய கட்டடங்கள் திறப்பு
பள்ளிகள், அங்கன்வாடிகள் புதிய கட்டடங்கள் திறப்பு
பள்ளிகள், அங்கன்வாடிகள் புதிய கட்டடங்கள் திறப்பு
பள்ளிகள், அங்கன்வாடிகள் புதிய கட்டடங்கள் திறப்பு
ADDED : ஜூலை 16, 2024 04:35 AM
மாமல்லபுரம் : ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் ஆகியவற்றுக்கு, சென்னை அணுமின் நிலையம் சார்பில், 1.71 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடங்கள் கட்டி துவக்கப்பட்டன.
கல்பாக்கத்தில் இயங்கும் சென்னை அணுமின் நிலையம் சார்பில், சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ், சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கல்பாக்கம் அருகில் உள்ள நெய்குப்பி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 61.32 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறைகளுடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
நரசங்குப்பத்தில், 24.82 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி கட்டடமும், திருக்கழுக்குன்றம் மங்கலத்தில், 60.74 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறைகளுடன் கூடுதல் கட்டடமும் கட்டப்பட்டுள்ளன.
பரமசிவம் நகரில், 24.58 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அவை அனைத்தையும், நேற்று நடந்த விழாவில், அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா திறந்துவைத்தார்.
மனிதவள துணை பொதுமேலாளர் வாசுதேவன், ஒருங்கிணைப்பாளர் நரசிம்மராவ், தமிழ்நாடு அணுமின் ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் கருணாமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.