/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ஆக.,2 வரை செங்கை தடத்தில் இரவு நேர ரயில்கள் மட்டும் ரத்துஆக.,2 வரை செங்கை தடத்தில் இரவு நேர ரயில்கள் மட்டும் ரத்து
ஆக.,2 வரை செங்கை தடத்தில் இரவு நேர ரயில்கள் மட்டும் ரத்து
ஆக.,2 வரை செங்கை தடத்தில் இரவு நேர ரயில்கள் மட்டும் ரத்து
ஆக.,2 வரை செங்கை தடத்தில் இரவு நேர ரயில்கள் மட்டும் ரத்து
ADDED : ஜூலை 23, 2024 01:36 AM
சென்னை, தாம்பரம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணி, இன்று முதல் ஆக., 14ம் தேதி வரையில் நடக்கிறது.
இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், வழக்கமாக செல்லும் 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும் என, கடந்த 17ம் தேதி ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
இது, பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.
பின், ஆக., 2 வரை இரவு நேர ரயில்களை மட்டும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இது குறித்து தெற்கு ரயில் கோட்டம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு:
தாம்பரம் ரயில்வே பணி மேம்பாட்டு பணிகளுக்காக, 55 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆக., 2ம் தேதி வரையில், வழக்கமான காலை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும். இரவு 10:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு, மாறாக பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இருப்பினும், வரும் 27, 28ம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், ஏற்கனவே அறிவித்த படி 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும்.
அதே போல, ஆக., 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை கடற்கரை -- தாம்பரம் -- செங்கல்பட்டு வழித்தடத்தில் 55 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும்.
இதற்கு மாற்றாக, கடற்கரை - பல்லாவரம் - 15; பல்லாவரம் - கடற்கரை - 14; கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு - 7; செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி - 7 மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.