/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ டூ - வீலர் மீது லாரி மோதி மறைமலை நகரில் ஒருவர் பலி டூ - வீலர் மீது லாரி மோதி மறைமலை நகரில் ஒருவர் பலி
டூ - வீலர் மீது லாரி மோதி மறைமலை நகரில் ஒருவர் பலி
டூ - வீலர் மீது லாரி மோதி மறைமலை நகரில் ஒருவர் பலி
டூ - வீலர் மீது லாரி மோதி மறைமலை நகரில் ஒருவர் பலி
ADDED : ஜூன் 26, 2024 01:05 AM
மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் அடுத்த நின்னக்கரை ஐஸ்வர்யம் நகரை சேர்ந்தவர் கீர்த்திவாசன், 54. நேற்று மாலை, மறைமலை நகர் பாவேந்தர் சாலையில், தனது 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பாவேந்தர் சாலையில் இருந்து அண்ணா சாலையை கடக்க முயன்ற போது, பின்னால் வந்த 'டாரஸ்' லாரி மோதி, கீர்த்திவாசன் படுகாயம் அடைந்தார்.
பொத்தேரி தனியார் மருத்துவமனையில், கீர்த்தி வாசனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.