ADDED : ஜூன் 26, 2024 01:06 AM
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் நடுத் தெருவை சேர்ந்தவர் அஞ்சா லட்சுமி, 58. கடந்த 23ம் தேதி காலை, வீட்டை சுத்தம் செய்த போது, குளிர்சாதன பெட்டிக்கு அடியில் இருந்த நல்ல பாம்பு,அஞ்சாலட்சுமியின் காலில் தீண்டியது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சைபலனின்றி, நேற்று நள்ளிரவு அஞ்சாலட்சுமி உயிரிழந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.