/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 14வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி 14வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி
14வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி
14வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி
14வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி
ADDED : ஜூலை 28, 2024 11:38 PM

மாதவரம் : மாதவரம் ரவுண்டானா அருகில் ஜி.என்.டி., சாலையில் ரேடியல் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர், பாக்கீர், 72. இவர், மண்ணடியில் ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். இவருக்கு மகள், மகன் என, இரு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் பாக்கீர், குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
மாதவரம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கேன்சரால் பாதிக்கப்பட்ட பாக்கீர், மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.