/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தெருவை ஆக்கிரமித்து சாய்தளம் ஊரப்பாக்கத்தில் அடாவடி தெருவை ஆக்கிரமித்து சாய்தளம் ஊரப்பாக்கத்தில் அடாவடி
தெருவை ஆக்கிரமித்து சாய்தளம் ஊரப்பாக்கத்தில் அடாவடி
தெருவை ஆக்கிரமித்து சாய்தளம் ஊரப்பாக்கத்தில் அடாவடி
தெருவை ஆக்கிரமித்து சாய்தளம் ஊரப்பாக்கத்தில் அடாவடி
ADDED : ஜூலை 22, 2024 06:50 AM

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் அருகில் உள்ள அபிராம் நகர் இரண்டாவது தெருவில், சாலையை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் கார் நிறுத்துவதற்காக சாய்தளம் அமைத்துள்ளார்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
கார் நிறுத்துவதற்காக, தெருவின் பாதி பகுதியை ஆக்கிரமித்துள்ளார். இதனால், அந்த தெருவில், கார், ஆட்டோ, மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு சிக்கலாக உள்ளது.
அதுமட்டுமின்றி, அப்பகுதிவாசிகள் போக்குவரத்துக்கும் இடையூறாக, அந்த சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.